3/6/09

ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீனா கடும் எதிர்ப்பு


இலங்கை நிலைமைகள் தொடர்பில் ஐ.நா.பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா.செயலாளருடன் உத்தியோகபூர்வமற்ற முறையில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15நாடுகளைக்கொண்ட ஐ.நா.பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள துருக்கி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையின் உள்விவகாரத்தில் அண்டை நாடுகளோ சர்வதேச நாடுகளோ தலையிடத்தேவையில்லையென சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை பிரச்சினையை அந்த நாடே பார்த்துக்கொள்ளும் சர்வதேச நாடுகள் விரும்பினால் நிவாரண உதவிகளை செய்யலாம் என சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக