29/5/09

ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை": தமிழருவி மணியன்


ஈழத் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.

சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.


ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.போனவையெல்லாம் போகட்டும்.


கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.


ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.
புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.


ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.
ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.


ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

இல்லாத இந்திய தேசியமும், இந்தியக் கொடியின் மாற்றங்களும்

1906 ஆம் ஆண்டு இந்தியாவிற்கென ஒரு தேசியக்கொடி தேவை எனக் கருதிய வெளிநாட்டில் வாழ்ந்த சில இந்தியர்களால் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.



1916 ஆம் ஆண்டு சப்தரிசி மண்டலத்தின் சின்னம் மேல் இடது புறமும் யூனியன் சாக் கொடி “தன்னாட்சி” இயக்க காலத்தில் வழக்கத்தில் இருந்தது.

1921 ஆம் ஆண்டு காந்தியால் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பெசவாடா கூட்டத்தில் ஆதரிக்கப்பட்டு 1931காங்கிரசுக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.




1931 ஆம் ஆண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கராச்சி கூட்டத்திற்கு பின் அமைக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்படவில்லை.




1931 ஆம் ஆண்டு ஆகத்து (ஆகஸ்ட்டு) -ல் காந்தியால் கொண்டுவரப்பட்டது. சில மாற்றங்களுடன் பாம்பாய் காங்கிரசில் ஒப்புக்கொள்ளப்பட்டது. செந்நிறம்- மனத்தின்மை, வெள்ளை - உள்ளத்தூய்மை, பச்சை- நம்பிக்கை, வீரம் ராட்டை - மக்களின் நல்வாழ்வு சின்னம் .
1947 ஆம் ஆண்டு ஆகத்து 15(ஆகஸ்ட்டு) சுதந்திர இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஒத்துக் கொல்லப்பட்டது . நடுவில் உள்ள அசோக சக்கரம் அறம் மெய்யுணர்ச்சியின் சின்னம்.
இப்போது இறுதி வடிவமாக இந்தியா காட்டும் வல்லரசியக் கனவுக் கொடி.
நாளை உடைந்து நொறுங்கும் இந்தியாவில்
உருத்திரண்டு எழும் தேசிய இனங்களி்ன் பேரெழுச்சி!
உலக வரைபடத்தில் இன்னும் பல ..,
தேசியக் கொடிகளாய் இன்னும் பல ..,
என இந்தியத்துணைக் கண்டத்தில் தோன்றும்
அதற்காய் களம் காண்போம்!!
படங்கள் - மதுரை காந்தி அருங்காட்சியகம்.

28/5/09

பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?



கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் பொட்டு அம்மான். உளவுப் பிரிவு தலைவராக இருந்து வந்தார். பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் பொட்டுதான் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடங்கள், செயல்பாடுகள் குறித்து அவரது மனைவிக்கு அடுத்தபடியாக பொட்டு அம்மனுக்குத்தான் தெரியும். அந்த அளவுக்கு மிக மிக முக்கிய இடத்தில் இருந்தார் பொட்டு அம்மான். மிகத் திறமையானவராக கருதப்படும் பொட்டு அம்மான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக முன்பு ராணுவம் கூறியது. ஆனால் பின்னர் ராணுவ தளபதி பொன்சேகா கூறுகையில், பொட்டு அம்மானின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இதனால் பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் எங்கு இருப்பார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அவர் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் ராணுவத்தின் பிடியில் சிக்கக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை என்பதால் அதுவும் நம்பும்படியாக இல்லை. பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பொட்டு அம்மான் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமீபத்தில் முடிந்த கடைசிக்கட்ட போரின்போது அவர் தப்பியிருக்க முடியாது. அதற்கு முன்பே அவர் தப்பிப் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

தென் ஆசிய அதிகாரப் போட்டியில் இன்று பலியாகிக் கொண்டிருப்பது ஈழம். நாளை பலியாகப் போவது நேபாளம் - மீண்டும் ஆயுதப் போராட்டம்....


எங்களது மக்கள் விடுதலை இராணுவம் 20,000 வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய இராணுவம். ஐ.நா. படைகளைவிட இருமடங்கு பெரிய இராணுவம்.
அந்த இராணுவம் முகாம்களிலே அடைக்கப் பட்டிருக்கிறது. எங்களுடைய ஆயுதங்கள் பெட்டகங்களிலே வைத்து பூட்டப்பட்டிருக்கின்றன. சில புரட்சியாளர்கள் நாங்கள் எங்களுடைய ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டோம், ஆயுதங்களைக் கையளித்து விட்டோம் என்று கருதிக் கொண்டு குழப்பமடைந்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
பத்தாண்டு காலம் நடந்து வந்திருக்கிற மக்கள் போர், அங்கே இன்றைக்கு இருக்கிற (ஜனநாயகம்) அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. அந்த ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த அரசியல் சூழல் எத்தகையது என்றால், ஆயுதமேந்தி நாங்கள் அடையக்கூடிய நோக்கத்தை அமைதியான முறையிலே அடைகிற வாய்ப்பை அது ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே தான், நாங்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோமே தவிர, ஆயுதப் போராட்டத்தை ஒரேயடியாக கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான கஜுரோல் சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் நேபாளத்தில் தங்கள் நிலையினை இப்படித் தெளிவு படுத்தியிருந்தார்.

இம்மாதம் 28‐ ஆம் தேதியோடு நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு திரும்பி விடுவார்களோ என்கிற நிலை இன்று நேபாளத்தில் தோன்றியுள்ளது. பிரதமர் பிரசண்டாவுக்கும், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலுக்கும், ஜனாதிபதி ராம் பரன் யாதவிற்கு மிடையிலான மோதலில் இப்போது மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் பிரசண்டா தன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய சில வாரங்களாகவே நேபாளத்தில் நிச்சயமன்ற்ற நிலை, தலைநகர் காத்மாண்டுவில் மீண்டும் மாவோயிஸ்ட் போராளிகளும் ஆதரவாளர்களும் பிரண்டாவுக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருக்க நேபாளம் தொடர்பாக தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்கி விட்டது இந்தியா. இதோ கடந்த திங்கட்கிழமை மாதவ் நேபாள் நேபாளப் பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
நேபாளத்தில் ஏன இந்தக் குழப்பம்? இந்தியா என்ன விரும்புகிறது ?

பத்தாண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்த மாவோயிஸ்டுகளுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் ஏழு கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தார்கள். ஆட்சிக்கு வந்த மாவோயிஸ்டுகள் தங்களின் இருபதாயிரம் போராளிகளைக் கொண்ட மக்கள் படையை இராணுவத்தோடு இணைக்க முனைப்புக் காட்டினார்கள். ஆனால் இராணுவத் தளபதி ருக்மாங்கத் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அப்போதே புகையத் தொடங்கியது பிரச்சனை. நேபாளம் ஒரு குடியரசு நாடாக மலந்த நாளில் இருந்து தன் நட்பு நாடாக அது வரித்துக் கொண்டது சீனாவை. தன் தோள்பட்டையில் அமர்ந்திருக்கும் நாடொன்று தென்னாசியாவில் தன் போட்டியாளரோடு சேர்வதை இந்தியா விரும்பவில்லை. இதனால்தான் தன் செல்லப் பிள்ளைகளான நேபாள ஜனாதிபதியையும் இராணுவத் தளபதியையும் வைத்து அங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது.

இந்தியா.நேபாள பிரதமர் பிரசண்டா சீனாவோடு சமூக பொருளாதார ஒப்பந்தம் ஒன்றை விரைவில் செய்து கொள்ள இருந்தார். ஆனால் அதற்கு முன்னராகவே நேபாளத்தை ஆளும் ஏழு கட்சிக் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கி பிரசண்டாவை பதவியை விட்டு இறக்கியது இந்தியா.மவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த போது மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். மன்னரின் அடிப்பொடிகள் பலரும் பீஸ் பிடுங்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார்கள்.

ஆனால் மாவோயிஸ்டுகளால் யாரெல்லாம் களை எடுக்கப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் இப்போது இந்தியாவின் ஆதரவோடு ரகசிய ஆலோசனையில் ஈடு படுகிறார்களாம். நேபாளத்துக்கான புதிய அரசியல் சட்டத்தை வடிவமைக்கக் கோரும் மாவோயிஸ்டுகள் அது இன்றைய கூட்டணி ஆட்சியில் சாத்தியமாகாமல் போனால் மீண்டும் பூட்டப்பட்ட ஆயுதங்களின் சாவிகளை எடுக்க நேரிடலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு திருபிச் செல்வது மாவோயிஸ்டுகளுக்கு சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் ஏகாதிபத்தியம் கட்டவிழித்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சூழலை கவனத்தில் எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. இந்தியாவின் பிராந்திர ஆதிக்க நலனையும் சீனாவின் பிராந்திய நோக்கத்தையும் புரிந்து கொண்டு மாவோயிஸ்டுகள் கவனமாக நடக்க வேண்டும்
இல்லை என்றால் மீண்டும் தன் போராளிகளோடு பூட்டப் பட்ட ஆயுதப் பெட்டகங்களின் சாவியை எடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவுக்கும் சீனாவுக்குமாக தென் ஆசிய அதிகாரப் போட்டியில் இன்று பலியாகிக் கொண்டிருப்பது ஈழம். நாளை பலியாகப் போவது நேபாளம்.

23/5/09

இராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை - கொளத்தூர் மணி

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப் பற்றி சீமான் அடுத்துப் பேச இருக்கிறார்.

நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ -இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், - நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ - அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எதைக் காரணமாக வைத்து இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ‘ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேச விரும்புகிறேன்

நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது; நடந்தால் வலிக்கிறது. அந்தப் புண்ணை கீறிவிட்டுத்தான் ஆற்றவேண்டும். அதை நாம் யாரும் செய்யவில்லை. ‘நாம் அந்தப் புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும்’ என்று நான் விரும்புகிறேன்.

கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற எனக்கு, அதை விளக்கவேண்டிய கடமை இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டு இருக்கிறார்களா? காங்கிரஸ் தலைமையில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள். காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் நமக்கு வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிட மொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப் பார்க்கிறான். இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் நம்மினத்தவர்களுக்கு உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாக வந்து நிற்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமது தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியவே இல்லை. எந்த்த தடயமும் காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.

ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழித் தீர்மானம் வந்தபோது இந்திக்கு ஆதரவாக சரிபகுதி வாக்குகள், இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள். காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை இந்திக்கு அளித்துதான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும். நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. கள்ள ஓட்டு போல, இந்த தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள்

இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார் நேரு, ‘நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று. பெரியார் சொல்லுவார், ‘முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதி அவர்’ என்று. ஆனால், ‘நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று 1951-யில் சொன்ன நேரு, 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், ‘சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள்’ என்று

இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதினார். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், அவர் மீது நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதால் அதற்கு வருவோம். ராஜீவ் காந்தி யார்? வேளாண்மை செய்யும் விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தியும் அதை எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.

ராஜீவ் அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜான் நீல் என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டான். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்த்திருக்கிறோம், கட்டபொம்மன் சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று. இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமானது அல்ல.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா இன் சிறீலங்கா’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன. நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகத் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம். அதைப் படித்துப் பாருங்கள். அதில் பல செய்திகள், அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார்.

அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு ஹர்சரத் சிங்விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்கு தொலைபேசியில் சொல்கிறான், ‘இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு’ என்று. அவர் மறுக்கிறார். ‘நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் கீழ் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் கேட்கிறார். அதன்பின் தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார். ‘மறுத்துவிடு என்று சொல்லிவிடு. அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது’ என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு ‘முடியாது’ என்று சொல்கிறார்.

அப்போது தீட்சித் சொல்கிறான், ‘இதை நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது’ என்று. இதை தனது நூலில் எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அந்த நூல் இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் இராஜீவ் காந்தி இல்லையா? அப்போது அந்தத் தளபதி இராஜீவ் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை; ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், அவரைக் கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, ‘இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்’ என்று ஆர்.கே.தவானைக் காட்டுகிறது.

ஆனால் அவரை தனது கட்சிக்குப் பொது செயலாளராக நியமிக்கிறார் இராஜிவ் காந்தி. அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். இப்படி தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி அவன்.ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போன இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இராஜீவ் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்வதற்கு.

1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னாடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் இவர்களுக்கு நினைவிற்கு வந்திருக்கிறது. சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே, என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்? ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம் சொல்கிறது. அதை நிறைவேற்ற இந்தக் காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக ‘உயிர்தியாகம் செய்த’ ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள் இது வரை? இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்தியாவிற்கு எதிரானவர்களை கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது சீன நாடு இலங்கையில் கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்? இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்தாய், இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தாய். இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய். நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், ஒரு ராஜீவ் காந்திக்கு இவர்களுக்கு இத்தனை ஏக்கம் வருகிறதே! ஆறாயிரம் ஈழத்தமிழர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே? ஆயிரம் பெண்களைக் கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே? வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லிச் சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று காங்கிரஸ்காரன் சொல்கிறான்.

கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். தன்னுடைய மகன் ஸ்டாலினைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் சிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் பிரபாகரன் சொன்னார், ‘ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன்’ என்று சொன்னார். ஆனால் நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா?

தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார். ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், இரக்கம் இருக்கிறவன் அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார். முத்துக்குமார் தனது கடிதத்தில் ‘அறத்திற்கே அன்பு சார்பென்ப’ என்று திருக்குறளை நினைவூட்டுகிறார். வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம் என்று. அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்.

எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு, கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா!இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? காங்கிரஸ்காரன் கேட்கிறான். இலங்கை கப்பற்படை வீரன் இராஜீவை அடித்தானே, ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், செத்துப் போயிருப்பான். அந்த கப்பற்படை வீரனிடம் கேட்டபோது, அவன் சொன்னான், ‘நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது’ என்று.காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், ‘நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான்’ என்று சொல்கிறானே, ‘நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை’ என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது. இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.

ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களைப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம் போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும்போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இருக்கிறது. ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்பதுதான். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லி இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று முழங்க வேண்டும்.

சிங்களவனுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும். நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா என்று சந்தேகிக்க வேண்டும். சந்தேகிப்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி யுத்தம் தொடுத்தார்கள். அந்த நாட்டில் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் அகதிகளாக இங்கு வந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம். 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது.

நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. எழுபதுகளில் ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் அப்போது 6 கோடி என்றால் இப்போது 100 கோடி ரூபாயுக்கும் மேல். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டியபோது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு என்ற சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன் ஈழத் தமிழ் அகதிகளுக்கு என்ன செய்தான்?

நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், கான்கிரீட் கட்டிடத்தில் வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது. 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. போகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு, பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, அவன் திபெத்தியன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழ்நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?

ஈழத்தமிழர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் ஒன்று இருக்கிறது. பல பேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழனை ‘புலிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைப்பதற்குத்தான் தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப் பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு. மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நாம் யோசிக்கிறோம், இது நம் அரசாக இருக்க முடியுமா? நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.

ஏற்கனவே சொன்னேன், வெளிநாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்கிறான். இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை. 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக ஆங்கிலேயன் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம். அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். ‘அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன்’ என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் டயரைச் சுட்டுக் கொன்றான் உத்தம் சிங்.

அங்கே போய் உத்தம்சிங் சுட்டது, ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியில் சுட்ட டயரை அல்ல, அதாவது ஜெனரல் டயர் இல்லை. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சுட ஆணையிட்டவனின் பெயரும் டயர்தான். அதாவது மைக்கேல் டயர். நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கிற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினான். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்? அதனால் எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைத்தான் கொன்றான்.21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் அடக்கம் செய்யப்பட்ட அவனது உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்கள்.கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார். அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த, பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி. இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம். ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுக்கப்பட்டதற்குக் காரணமானவனை, உத்தம்சிங் போல் ஈழத்தமிழன் எவனாவது சுட்டுக் கொல்கிறான். உங்கள் நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும். நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடை நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான். நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், ‘இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா’ என்று. டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல. அகில இந்திய கட்சியில் இருக்கிற இன உணர்வு ஏன் நமக்கு இல்லை?

1972-யில் செல்வா தமிழ்நாடு வந்தார். பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்டார். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ‘ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை எப்படி உதவ முடியும்?’. நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம் இது வரை? இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.

நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு. எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும்.1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்தபோது, ‘அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள்’ என்று ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

சத்தியமூர்த்தியைக் குறித்து குத்தூசி குருசாமி ‘அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். ‘தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு. அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள்’ என்று எழுதினார்கள். அடுத்த வாரமே சத்தியமூர்த்தி மீது அடித்தார்கள். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, ‘அதோ காங்கிரசுகாரன் போறாங்’கிறது கூட ஒரு போராட்டம்தான். அவனை அவமானப்படுத்த வேண்டும். வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம். எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி நடத்தவிருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

(15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை)

நாம் எல்லோரும் ஒரே மக்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்படுங்கள் - அம்பேத்கர்

புதிய அரசமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென சட்டமன்றத்தில் 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத் தொழிலாளர் கட்சி சார்பில், நான் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறேன். நாம் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஏன் தொடங்க வேண்டும்? இந்தியாவில் ஏற்கனவே இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற வலிமை வாய்ந்த கட்சி இருக்கும்போது, புதிய கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற நியாயமான கேள்வியை பலர் கேட்கக்கூடும்



காங்கிரசின் முதன்மையான நோக்கம் சுதந்திரம் பெறுவது. நானும் எம் தோழர்களும்கூட சுதந்திரம் பெற விரும்புகிறோம். ஆனால், இது அத்தனை எளிதல்ல. ஓர் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்கும் வலிமையும் திறமையும் நமக்கு இல்லை எனில், நமது நோக்கத்தை நிறைவேற்ற – முன்பே முயன்று பலனளித்த செயல்முறைகளைப் பின்பற்றுவதே அறிவுடைமையாகும்.



இந்தியா இன்றளவும் ஒரு தேசமாக உருவாகவில்லை. இந்நாடு 4,000 சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இது போதாதென சாதியம், மாநிலப் பிரிவினை, மத வேறுபாடுகள், இன்னும் எண்ணிலடங்கா சச்சரவுகள், மோதல் மற்றும் முரண்பாடுகள் நாட்டைப் பிரித்து வைத்திருக்கின்றன. இத்தனைப் பிரிவினைகள் இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த இந்தியாவை கற்பனை செய்வதே கடினம். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு என ஒரு பொது லட்சியம் இல்லை. இத்தகைய சூழலில், பிரிட்டிஷ் அரசு முடிவுக்கு வந்தால் இந்தியா ஒரு தேசம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களும், மதவெறியர்களும், சாதி உணர்வாளர்களும் – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருப்பார்களா?



உண்மையான சுதந்திரத்தைப் பெறுவதற்கான உண்மையான வலிமை இல்லையெனில், அத்தகைய சுதந்திரத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்குவதே ஆபத்தானது. இன்னொரு புறம் நமது நிலைக்கும் காங்கிரஸ் நிலைக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. அரசமைப்புச் சீர்திருத்தங்களை காங்கிரஸ் விரும்பவில்லை. அது, சீர்திருத் தங்களுக்கு எதிரானது. அவர்கள் சட்டமன்றங்களில் நுழைந்த பிறகு சீர்திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் நமது எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்புடையவை அல்ல. இருப்பினும், அவற்றை சரிசெய்து நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைவிட, சட்டமன்றங்களில் கூடுதலான உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக நாம் கருதுகிறோம்.



இன்று காங்கிரஸ் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒரு கலப்படமான மக்கள் கூட்டமாக இருக்கிறது. அதில், மிகவும் வறிய கூலித் தொழிலாளர் கள், ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர் முதல் நிலவுடைமையாளர்கள் வரை, கந்து வட்டிக்காரர்கள், வியாபாரிகள், நடுத்தர மக்கள், முதலாளிகள், சுரண்டல்காரர்கள் என எல்லா தரப்பு மக்களும் இருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முரண்பட்ட நோக்கம் கொண்டவர்கள் அக்கட்சியில் திரண்டிருக்கின்றனர். ஏழை மக்களின் ரத்தத்தைச் சுவைப்பவர்கள், சுரண்டப்பட்ட மக்களின் நண்பர்களாக இருக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி கொழுத்த பணக்காரர்களின் மடியில் அமர்ந்திருக்கிறது. அவர்களால் எப்படி ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய முடியும்?



காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி அல்ல. அது, முதலாளிகளின் பாதுகாவலன். உழைக்கும் மக்களின் நலன்களை யும், பொது மக்களின் நலன்களையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ அக்கட்சியால் முடியாது. இதற்கு மாறாக, நமது அமைப்பான சுதந்திரத் தொழிலாளர் கட்சி, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரசைவிட நாம் எளிதாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.



நமது கட்சியின் முக்கிய நோக்கம், தீண்டத்தகாத மக்கள், உழைக்கும் மக்கள், ஏழை மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடுவதே. நமது கொள்கை மற்றும் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலேயே நம்மால் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.



தீண்டத்தகாத மக்களின் பிரச்சினைகளை விட்டுவிட்டு, பிற மக்களுடன் இணைந்து பணிபுரிவதை நான் ஏன் தேர்வு செய்தேன் என்று என்னிடம் பலமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். வரவிருக்கும் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி 175 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 15 பேர் தீண்டத்தகாதவர்களாக இருப்பர். இந்த 15 பேர்களால் திறம்படச் செயலாற்றுவது கடினம்.



ஏராளமான மக்களின் உதவி நமக்குத் தேவை. எனவே, நம்மைப் போன்ற கொள்கை கோட்பாடுகள் உள்ள பிற நண்பர்கள் நமக்குத் தேவை. தீண்டத்தகாதோர் அல்லாதோர் இடையிலும் நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நமக்கு நேர்மையாக உதவியிருக்கிறார்கள்; தங்களுடைய நலன்களைத் தியாகம் செய்து, நம்மோடு இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள். அதே போல நாமும் இத்தகையோரை நம்முடைய கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட வைக்க வேண்டும். எனவே, வீண் விவாதங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.



(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 391